Monday, October 22, 2007

கண்டனக் கூட்டம் எனும் கேலிக்கூத்து-By கி அ அ அனானி

கி.அ.அ.அ விடமிருந்து ஒரு மெயில் ... ஒரு "கண்டன மேட்டர்" அவருக்கே உரிய ஸ்டைலில் ! நான் ஞாநி எழுதியதையும் படிக்கவில்லை, இது குறித்து வலையில் வந்த பதிவுகளையும் பார்க்கவில்லை, அதனால் பிரச்சினை / கண்டனம் குறித்து தெளிவாகத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் தற்சமயம் இல்லை! இருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் கி.அ.அ.அ மேட்டரை பதிப்பிக்கிறேன் (பதியாவிட்டால், கி.அ.அ.அ. என்னை பிரித்து மேய்ந்து விடுவார் என்று உள்ளூர பயமும் ஒரு காரணம் :)) இதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினையாக நான் எந்த கருத்தும் தெரிவிப்பதாக இல்லை !!! கி.அ.அ.அனானி அவர்களே பின்னூட்ட களத்தில் நின்று விளையாடுவார் (Stand and Play) ;-)
எ.அ.பாலா
********************************************************

ஞாநி என்கின்ற அதி புத்திசாலி வயசாகிவிட்டதே...வாரிசுகள் முன்னுக்கு வந்து வயதானவருக்கு வயதுக்குறிய ஓய்வைத்தரட்டுமே என ஓ போட்டு விட்டாராம்?

ஆஹா...ஆரம்பித்து விட்டார்களையா? உன் சாதி அப்படி அதனால்தான் நீ இப்படி சொன்னாய் என்பதிலிருந்து ஆரம்பித்து மஹால் புக் பண்ணி கண்டனக் கூட்டம் போடுவது வரை நன்றியை நன்றாகவே காட்டுகிறார்கள்.

வாஜ்பாயைக் கேட்டாயா? அத்வனி மகள் பிரதீபாவை சொன்னாயா ? எம் ஜி ஆரை சொன்னாயா என கருத்தாழம் மிக்க கேள்விகளையும் அள்ளி வீசுகிறார்கள். ( அவர்களையெல்லாம் கேட்காததால் இதையும் கேட்கக் கூடாது அல்லது இது பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்பதெல்லாம் ஒரு லாஜிக்கா என்பது ஒரு புறம் இருக்கட்டும்...நான் கீழே கேட்பதற்கு முதலில் இவர்களது பதில் என்ன ?)

போன தடவை மக்கள் மாங்காய் மடையர்களாய் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினார்களே..அப்போது தனியாளாக சட்ட சபைக்கு போக பயந்து போகாமலேயே உடம்பு சரியில்லை என்று உதார் விட்டுக் கொண்டிருந்த போது எங்கே போயிருந்தீர்கள் ? அப்போது போட வேண்டியதுதானே இந்தக் கண்டனக் கூட்டத்தை..தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ சட்டசபைக்குக் கட்டாயம் போகத்தான் வேண்டும் என்று.

அப்போது எங்கிருந்தீர்கள் ? குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு முறையேனும் சட்ட சபை போகவில்லையெனில் எம் எல் ஏ அந்தஸ்து பறி போய்விடும் என்பதற்காகா நாலு பேர் பிடித்துக் கொள்ள நடந்து போய் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு வாசலோடு திரும்பியவருக்கு ஆரத்தி எடுத்த கூட்டத்தில் ஓ போட்டுக் கொண்டு இருந்தார்களா ?

நல்ல விதமாக கண்டனத்தை தெரிவித்தார்களாம்..பாராட்டி பதிவுகள் வேறு !!!!இதில் இதற்குமேல் சொல்ல ஒன்றும் இல்லை அதனால் இத்தோடு விட்டார்கள் இல்லையெனில் எந்த எல்லையையும் தொடாமலா விடுவோம் நாம் ?

நல்ல வேளை..இந்த முடிசூடா மன்னர் தமது பரப்பரைக்கு தனது பட்டத்தை தரலாமே என்றுதான் எழுதினார் ஞாநி...இல்லையென்றால் இத்தனை நேரம் ஞாநிக்கும் ஆனந்த விகடனுக்கும் மதுரை தினகரன் ஆபிஸில் ஏற்பட்ட கதிதான்.

இந்த மாதிரி கடைந்தெடுத்த ஜால்ராக்களுக்கெதிரான என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்


கி அ அ அனானி.

39 மறுமொழிகள்:

ROSAVASANTH said...

இந்த கி அ அ அனானி, பாலா இவர்களின் அரசியல் மற்றும் நோக்கங்களுடன் எனக்கு எந்த பகிர்தலும் இல்லை. நேற்று வா.மணிகண்டனின் பதிவில் இந்த கண்டன கூட்டக் கண்ராவி பற்றி (பாராட்டி எழுதிய) பதிவை படித்தேன். வேறு யார் யார் பாராட்டி செய்தி தந்திருக்கிறார்கள் என்றும் தெரியாது. எங்காவது ஒரு இந்த கண்றாவி கேலிக்கூத்து பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதால் (இது குறித்தெல்லாம் பதிவு எழுதக் கூடாது என்று உறுதிமொழி கொண்டிருப்பதால்) இங்கே எழுதுகிறேன்.

ஞாநி எழுதியதை இன்னும் படிக்கவில்லை என்றாலும், இங்கே கேள்விப்பட்டவரையில் அது மோசமானதுதான்; மேலும் ஞாநியின் பல அண்மைக்கால கருத்துக்களை உளரல் என்ற அளவில் பார்கிறேன். (சுகுணாவின் பதிவில் நான் சொன்ன கருத்துக்களிலும் மாற்றமில்லை.) ஆனால் இந்த விஷயத்திற்காக ஞாநி மீது இது வரை நிகழ்ந்த தாக்குதல் போன்று நோய்கூறு கொண்ட கும்பல் தாக்குதலை சமீபத்தில் வேறு காணவில்லை. வயோதிகம் காரணமாக கலைஞர் பதவி விலகி ஸ்டாலின் பதவிக்கு வரவேண்டும் என்று சொல்ல ஞாநிக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை விமர்சிக்கலாம்; ஆனால் சொன்ன ஒரு கருத்திற்கான இந்த தாக்குதலின் தன்மை ஜனநாயகதன்மை சற்றும் இல்லாத பாசிச கூறு கொண்டது. இதில் ஞாநியின் பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை. இதை பார்பனியம் என்று சொல்வது போன்ற நோய்கூறு கொண்ட நகைச்சுவையும் வேறு கிடையாது. இதையெல்லாம் பார்பனியம் என்று உளரத் துவங்கினால் உண்மையிலேயே இந்த சமூகத்தில் கான்சர் செல்களாக வியாபித்திருக்கும் பார்ப்பனியதை எப்படி ஞாநியின் ஒண்ணரையணா கருத்திலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காணப்போகிறார்கள்? இந்த ஓண்ணரையணா பிரச்சனைக்கு வாணிமகாலில் (இந்த கண்ராவிக்கெல்லாம் யாரய்யா நிதி உதவி செய்கிறார்கள்?) ஆம்வேகாரன்கள் கணக்காய் காசு கட்டி கூட்டம் போடுவது போன்ற கேவலம் வேறு கிடையாது. குட்டி ரேவதியின் அழுகுணி ஆட்டத்திற்கு பிறகு நடந்திருக்கும் அடுத்த கேலிக்கூத்து இது. மார்கஸ், பிரபஞ்சன், ரவிக்குமார் போன்றவர்கள் கொஞ்சம் கூட விமர்சனமின்றி கும்பல் மனநிலையுடன் சேர்ந்து கோஷ்டி கானம் பாடுவது இன்றய சூழல் மீது எந்த நம்பிக்கையும் ஏற்படுத்த மாட்டேன் என்கிறது. எதையாவது எங்காவது சொல்லி ஆகாவேண்டும் என்பதற்காக இங்கே எனது இந்த பின்னூட்டம்.

மணிப்பக்கம் said...

கலக்கிட்டீங்க போங்க... நான் சொல்ல வந்ததது இதுதான். நன்றி!

dondu(#11168674346665545885) said...

//எதையாவது எங்காவது சொல்லி ஆகவேண்டும் என்பதற்காக இங்கே எனது இந்த பின்னூட்டம்//.
:))))))))))

அதே கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் கறிகாய் அளவுக்கு மூளைச்செயலிழந்து விட்டார் என்று அழுது சமீபத்தில் 1984-ல் புலம்பிய போது இவர்கள் எல்லாம் எங்கே சென்றிருந்தார்கள்? ஞாநியாவது சுயநலம் இல்லாமல் கூறினார், ஆனால் கருணாநிதி செய்தது அப்பட்ட சுயநலம்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

"எங்காவது ஒரு இந்த கண்றாவி கேலிக்கூத்து பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதால் (இது குறித்தெல்லாம் பதிவு எழுதக் கூடாது என்று உறுதிமொழி கொண்டிருப்பதால்) இங்கே எழுதுகிறேன்"

கருத்துப் பகிர்தலுக்கு நன்றி ரோசாவசந்த்

"இதில் ஞாநியின் பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை. இதை பார்பனியம் என்று சொல்வது போன்ற நோய்கூறு கொண்ட நகைச்சுவையும் வேறு கிடையாது. "

இதையேதான் நானும் சொல்ல விழைகிறேன்.உங்களைப் போன்றவர்கள் சொல்வதாவது சிரிதளவேனும் புத்தியில் உறைக்கிறதா பார்ப்போம்!!!!

கி.அ.அ.அனானி

said...

""""சிவாஜி - The Boss! said...
கலக்கிட்டீங்க போங்க... நான் சொல்ல வந்ததது இதுதான். நன்றி!"""

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ச்ச்சும்மா அதுருதுல்ல?

கி அ அ அனானி

said...

////அதே கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் கறிகாய் அளவுக்கு மூளைச்செயலிழந்து விட்டார் என்று அழுது சமீபத்தில் 1984-ல் புலம்பிய போது இவர்கள் எல்லாம் எங்கே சென்றிருந்தார்கள்? ஞாநியாவது சுயநலம் இல்லாமல் கூறினார், ஆனால் கருணாநிதி செய்தது அப்பட்ட சுயநலம்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்////

அதானே...

அவர் அக் மார்க் பார்ப்பன / பார்ப்பனீய எதிரி என்று ஸ்தாபிக்கப்பட்டவர்...அதனால் அவர் என்ன சொன்னாலும் / செய்தாலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏற்புடையதே. அல்லது ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்!!!!

கி அ அ அனானி

said...

ரோசாவசந்த் சுகுணா திவாகர் பதிவில் எழுதியதையும், இப்போது எழுதியிருப்பதும் முரண்படுகிறது.அந்தக் கூட்டத்தில் பேசியவர்களுக்கும், ரோசாவசந்ததிற்கும் இருப்பது
பார்ப்பன வெறுப்புதான். அது வெளிப்படும் விதத்தில்தான் வேறுபாடு இருக்கிறது. மனுஷ்யபுத்திரன்
உட்பட அங்கு பேசியவர்கள் ஞாநி மீதான தனிப்பட்ட பகையை பயன்படுத்திக் கொண்டு கலைஞருக்கு தாங்கள் விசுவாசிகள் என்று கனிமொழி முன்னால் மெய்ப்பித்துவிட்டனர்.
ரோசாவும், இவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

said...

இப்படி எழுதினார் திருவாளர் ரோசா.

ரவி ஸ்ரீனிவாஸ் விழுந்த அதே குழியில் விழ ஞாநியும் தயாரகிக் கொண்டிருக்கிறாரோ என்று எனக்கு வெகு நாட்களாகவே தோன்றிக் கொண்டிருக்கிறது. ஜெயா டீவியில் அவர் வெகு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியை கண்ட போதிலிருந்து எழுந்த சந்தேகம் இது.

கண்ணகி விஷயத்தில் ஞாநியின் (நாமும் பாதுகாக்க வேண்டிய) கருத்துக்களுக்காக அவர் தாக்கப் பட்ட விதம் மோசமானது; குறிப்பாக அந்த விஷயத்தில் அவரது பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் தேவர்ஜாதி வெறியர்களால் (குறிப்பாக ஆனாரூனா போன்றவர்களால்) அவர் பாப்பான் என்று தாக்கப் பட்டார். இவை அவரை ஒரு வீம்பு கொண்ட எரிச்சலில், திமுக வெறுப்பு சார்ந்த இந்த நிலைபாட்டிற்கு தள்ளியிருக்கலாம். ஆனால் இப்படிப்ப்பட்ட குழியில் விழாதவனைத்தான் அறிவுஜீவி என்று சொல்ல முடியும். விழுந்தது மட்டுமில்லாமல், விழுந்த பின்பு அடிமனதில் மறந்து போன அல்லது தனக்குத்தானே மறைத்துக் கொண்டிருந்த கசடுகளை வக்கிரத்துடன் வெளியிடுவதுதான் இதன் மோசமான கட்டம். ரவிக்கு நேர்ந்தது அதுதான் (இன்றைக்கும் ரவி ஸ்ரீனிவாசின் நிலைபாடுகளை கண்டு ஆச்சரியப் படுபவர்களை கண்டுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.) ரவியின் நிலைக்கு ஞாநியும் விழுந்தால் எனக்கு ஆச்சரியப் பட பெரிதாய் இருக்காது; ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

https://www.blogger.com/comment.g?blogID=26087005&postID=3156857100982099431

said...

அனானி,

///அந்தக் கூட்டத்தில் பேசியவர்களுக்கும், ரோசாவசந்ததிற்கும் இருப்பது
பார்ப்பன வெறுப்புதான்.///

இவர்களுக்கு பார்ப்பன வெறுப்பு இருக்கலாம்..ஆனால் ரோசாவசந்துக்கு இருப்பது கருத்தியல் ரீதியானது..சொந்த ஆதாயத்துக்காக அவர் அந்த நிலைபாட்டை கொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும் இதை தங்களது விசுவாசத்தைக் காட்டவே வெளிப்படுத்தினார்கள் ..ஏனெனில் இதைத்தவிர(ஜாதி ரீதியாக தூற்றுவது தவிர) இந்த விஷயத்தில் வலுவாகச் சொல்ல எந்த கருத்தும் அவர்களிடம் இல்லை.

/// மனுஷ்யபுத்திரன்
உட்பட அங்கு பேசியவர்கள் ஞாநி மீதான தனிப்பட்ட பகையை பயன்படுத்திக் கொண்டு கலைஞருக்கு தாங்கள் விசுவாசிகள் என்று கனிமொழி முன்னால் மெய்ப்பித்துவிட்டனர்.///

கூத்து கட்டினால் ஆடத்தானே வேண்டும்...ஆனால் லாபகரமாக இருந்தால் இப்படிப் பட்ட பிழைப்பு தவறில்லை :)

கி அ அ அனானி

said...

அனானி 2

//ரோசாவசந்த் சுகுணா திவாகர் பதிவில் எழுதியதையும், இப்போது எழுதியிருப்பதும் முரண்படுகிறது///

நான் இல்லை என்றே நினைக்கிறேன்..ஞானியிடம் சமீப காலமாக பல இடங்களில் பார்ப்பனக் கூறுகள் வெளிப்படுகின்றன,,ஆனால் இந்த விமர்சனத்தில் அல்லது " கண்டனம் செய்யும் கூட்டம் " சொல்வது போல் அல்ல என்று அவர் சொன்னதாகவே நினைக்கிறேன்.இது என் அனுமானம் மட்டுமே .

கி அ அ அனானி

தொண்டன் said...

எ.எ.பாலா சார், கி.அ.அ. அனானி சார்,

புரளிமனோகர் சார் மாதிரி நீங்களும் தன் கையே தனக்குதவி திட்டம் தானா? அசத்துங்கோ. பின்னுறேள். கலக்குறேள்.

enRenRum-anbudan.BALA said...

இந்தப் பதிவுக்கு என் கருத்தாக எதுவும் கூற மாட்டேன் என்று பதிவிலேயே எழுதியிருந்தேன். ஆனால், அதைத் தளர்த்தி வசந்த்துக்காக ஒரு சில வார்த்தைகள்! கருத்து எதுவும் சொல்ல வேண்டாம் என்றெண்ணியதற்குக் காரணம், பின்புல ஆராய்ச்சி செய்து முத்திரை குத்தும் கூட்டத்தின் வாய்க்கு தற்சமயம் அவலாக வேண்டாம் என்பதற்காகத் தான்! கடைசியில் கருத்தை defend செய்வதற்கு பதில், என்னை defend செய்து கொள்ள வேண்டிய 'அவல' நிலையும் ஏற்பட நேரும்!

வசந்த்,
//இந்த கி அ அ அனானி, பாலா இவர்களின் அரசியல் மற்றும் நோக்கங்களுடன் எனக்கு எந்த
பகிர்தலும் இல்லை.
//
எதற்கு / யாருக்கு இந்த டிஸ்கி என்று புரியவில்லை ? யாரிடம் அங்கீகாரம் தேவை ? உங்களை வாசித்துப் புரிந்தவர்களுக்கு, உங்கள் அரசியல் மற்றும் இயங்கும் தளம் குறித்து நீங்கள் எதுவும் விளக்கம் தர வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத்து! அதே சமயம், ஒரு விஷயத்தில்
கி.அ.அ.அனானியுடனோ (அல்லது பாலாவுடனோ) ஒத்த கருத்து தங்களுக்கு இருப்பதை வைத்து
உங்களை எதிர்ப்பவர்களை நீங்கள் மதிக்க மாட்டீர்கள் என்பதும் தெரிந்தது தானே!

நம் பகிர்தலுக்கு, கருத்துச் சுதந்திரம், சமூகசேவை, இளையராஜா இசை, கால்பந்து ... என்று சில தளங்கள் இருக்கின்றன என்று நம்புகிறேன் :)

எ.அ.பாலா

தொண்டன் said...

கி.அ.அ. அனானி (எ) எ.அ.அ. பாலா அண்ணே!

என் பின்னூட்டம் எங்கே அண்ணே? நீங்களே எவ்ளோ நேரத்துக்கு அனானியாவும், சொந்த பேருலயும் மாற்றி மாற்றி போடுவீங்கண்ணே?

said...

///தொண்டன் said...
எ.எ.பாலா சார், கி.அ.அ. அனானி சார்,

புரளிமனோகர் சார் மாதிரி நீங்களும் தன் கையே தனக்குதவி திட்டம் தானா? அசத்துங்கோ. பின்னுறேள். கலக்குறேள்.///

///தொண்டன் said...
கி.அ.அ. அனானி (எ) எ.அ.அ. பாலா அண்ணே!

என் பின்னூட்டம் எங்கே அண்ணே? நீங்களே எவ்ளோ நேரத்துக்கு அனானியாவும், சொந்த பேருலயும் மாற்றி மாற்றி போடுவீங்கண்ணே?///

வாங்க தொண்டன்,

என்னடா ஆப்பு வச்சும் ஒருத்தனுக்கும் குத்தலையே அப்படீன்னு நெனைச்சுக்கிட்டுருந்தேன்...வாங்கிகிட்டுவாயை தொறக்காம நல்லவன் மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்தீங்களா..இப்ப பொறுக்க முடியாம பின்னூட்டமா ?

அது பதிப்பிக்க லேட்டானதும் எங்கே.. எங்கேன்னு இன்னொரு பின்னூட்டமா..அவ்வளவு குத்துதா ?

எ அ பாலாவும் நானும் ஒண்ணுல்ல தொண்டன்...அதை ஏற்கனவே http://balaji_ammu.blogspot.com/2007/04/322.html இந்தப் பதிவுல சொல்லிட்டாரே படிக்கலையா தொண்டன்..

கெரகத்தைப் பாத்திங்களா நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது ஆனா நீங்க யாருன்னு எனக்கு தெரியும்.

இனிமேலானும் பதிவு பற்றி கருத்து ( இருந்தா / தெரிஞ்சா) சொல்லப் பாருங்க தொண்டன்!!!

கி அ அ அனானி

said...

குத்துது. குடையுதா? நீங்க எழுதற ஒரு பதிவையும் எவனும் படிக்கறதில்லே. அய்யோ பாவம்னு பின்னூட்டம் போட்டா :-)))))

said...

////Anonymous said...
குத்துது. குடையுதா? நீங்க எழுதற ஒரு பதிவையும் எவனும் படிக்கறதில்லே. அய்யோ பாவம்னு பின்னூட்டம் போட்டா :-)))))
/////

அடடா தமிழ் வலையுலகின் Blog counter அனானி நீங்கதானா...அல்லாருக்கும் போன் போட்டு கேப்பிங்களாக்கும் ? எது படிச்சாங்க, எது படிக்கலைன்னு... அப்படியே யாரும் படிக்கலைனாலும் உங்க கயமைப் புண்ணூட்டத்த உங்க பின்னாடியே வச்சுக்கங்க... ஓ ...ஸ்மைலி போடணுமில்ல? :))))))

கி அ அ அனானி

enRenRum-anbudan.BALA said...

பதிவுக்கு தொடர்பில்லாமல்,(விவாதத்தை திசை திருப்புவதற்காகவே) வந்த ஏழெட்டு அனானி "உளறுவாய்" பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டன!

We The People said...

//தொண்டன் said...

எ.எ.பாலா சார், கி.அ.அ. அனானி சார்,

புரளிமனோகர் சார் மாதிரி நீங்களும் தன் கையே தனக்குதவி திட்டம் தானா? அசத்துங்கோ. பின்னுறேள். கலக்குறேள்//

என்னப்பா இது ஊருக்கெல்லாம் கொண்டை தெரியுதுன்னு நக்கலுட பார்ட்டி தன் கொண்டையை மறைக்காம வந்து பின்னூட்டமிட்டிருக்கு :))))

அப்புறம் பாலா, தி.மு.க கூட்டத்துக்கு போயிட்டு வந்து எதிர் கட்சியை திட்டுறாங்கன்னு சொல்லறதுல அர்த்தமில்லை :)))

ilavanji said...

அய்யா கி.அ.அ. அனானி,


எனக்கு ஒரு சம்பவம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. சொல்லி முடிச்சவொடனே "நீயும் அவந்தானா?!"ன்னு உங்க முத்திரைய தூக்கிட்டு குத்தவராம ஏதாச்சும் பதில் இருந்தா மட்டும் சொல்லுங்க.

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி காஞ்சி மகா பெரியவருக்கு 100 வருவம் வாழ்ந்து முடிச்சதுக்கு விழா கொண்டாடுனாங்க இல்லையா? பளபளா போஸ்டரெல்லாம் அடிச்சு கட்டவுட்டு வைச்சு ஊரையேக்கூட்டி பெரியவரை உட்கார வைச்சு தலையில 100 பவுன் காசுகளை கொட்டி கனஜோராக நடந்தாக நியாபகம். ஒருபவுன் காசு 8கிராம் இருக்குமா? அனைத்தும் துறந்த 100 வயசு பழுத்த கிழவனார் மகாபெரியவரு மேல இப்படி தங்க காசுகளை மண்டைமேல கொட்டி புல்லரிச்சு நின்ன கூட்டத்துக்கிட்ட போயி, "என்னாங்க இது அநியாயமா இருக்கு! 100 வயசு ஆனா ஒரு முதியவருக்கு இப்படியெல்லாம் விழா எடுத்து அவரு தலைல காசையெல்லாம் கொட்டி இப்படி கஷ்டப்படுத்தனுமா? அதுக்கு பேசாம அவரை மடத்துல இருந்து ரிட்டையராகிட்டு நடுவரு இல்லன்னா சின்னவருக்கு மடத்தலைவரு பதவிய கொடுத்துட்டு ஒதுங்கி இருக்கலாமேன்னு அந்த மண்டபத்துல இருந்த யாருக்குமே தோணலையா?

இதே ஆனந்தவிகடன்ல இந்த விழாவைப்பத்தி ஒரு பக்க செய்தி வந்தது. அதுல இந்த மாதிரி முற்றும் துறந்த மடத்தலைவர் மகா பெரியவருக்கே இப்படி ஆர்பாட்டமான விழா தேவையாங்கற மாதிரி "பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?" அப்படின்னு ஒரு வரி போட்டிருந்தாங்க. கதை இதோட முடியல. அதுக்கு அடுத்த வாரம் வந்த வாசகர் கடிதத்துல இந்த கட்டுரைக்கான கண்டனங்களுக்கு இடையில் ஒரு கடிதமும் வெளியிடப்பட்டிருந்தது. "வாழையிலை நிறைய விருந்து வைச்சு ஓரத்துல கொஞ்சம் நரகலை வைத்ததுபோல இருந்தது அந்த வரி" அப்படின்னு :) விகடன் இப்படி கேட்டதுல உங்களுக்கு ஏதாச்சும் தப்பா தோணுதா கி.அ.அ. அனானி? தப்புன்னு எங்கிட்ட வேறொரு கேள்வி இருக்கு. ரைட்டுன்னாலும் எனக்கு வேறொரு கேள்வி இருக்கு!

அவரு ஒரு மடத்துக்கு மட்டும் தான் தலைவரு. ஆனா இவரு நாட்டுக்கே முதல்வருங்கற ஜல்லிய எல்லாம் முன்னாடியே நிறைய பேரு பேசிட்டதால அதெல்லாம் விட்டுருவோம். முதியவருன்னா யாரா இருந்தாலும் முதியவரு தானேயா? அன்னைக்கு கேக்கலைன்னா இப்ப கேக்கறது தப்பா? பெரியவரும் அரசியல்வதியும் ஒன்னாங்கறதுக்கெல்லாம் நான் பேச ஒன்னுமில்லை. என் கேள்வி இதுதான்! 100 வயது முதியவரு அந்த வயசுலயும் இந்து மதத்துக்கு சேவை செய்யறதை ஆடம்பர விழாவா எடுத்து கொண்டாடுனா பக்தனாக எங்க மனசு ஏத்துக்கும் அதைப்பத்தி கேள்வி கேட்டா அந்தக்கேள்வி நரகல்னு சொல்லற அளவுக்கு கோவம் வரும்கற உணர்வுக்கும், எங்க கட்சித் தலைவரு உயிருள்ள வரைக்கும் அவர்தான் தலைவர் அதைப்பத்தி கேள்வி கேட்டா தொண்டனாக எங்களுக்கு கோவம் வரும்கற உணர்வுக்கும் என்னய்யா வித்தியாசம்?

பேரு போட்டு எழுத விருப்பமில்லாதனாலதான் அனானியா சிலபேரு பின்னூட்டம் போடறாங்க. நீங்களே உங்க பேருல பதிவு போடாமத்தான் கி.அ.அ. அனானின்னு ஓசில பாலா பதிவுல அனானி பதிவுகளே போடறீங்க! இதுல நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா நீ யாருன்னு எனக்குதெரியும்னு என்னத்துக்கு தேவையில்லாத வீராப்பு நக்கல்? அடையாளம் தெரியக்கூடாதுன்னு விருப்பப்படற ஒரு சக அனானி பின்னூட்டக்காரரைப் பார்த்து இப்படி நக்கல் அடிக்கறேன்னு நினைச்சுக்கிட்டு கேள்வி கேக்கறது ஒரு கி.அ.அ.அனானிக்கு அழகா?! :)

said...

Sri Chandrasekara Swamigal was leading a simple life.He handed over the administration of Kanchi Mutt to Jayendrar many years ago.
He was against any celebaratiob but devotees pleaded with him and
only then he relented. He wore Khadar till the end and was never after worldy pleaseures or wealth.
Ilanvanjis should know whom to compare with him and whom not.
In mutts the senior chooses a
successor and grooms him. At one
time the senior retires and hands over the Mutt administration to
junior. Gnani wants Karunanidhi to
do so and cites some reasons for that. Instead of arguing about it
you fanatics attribute motives
to him and bring in caste factor.
You deserve a Jayalaitha to take on you and you will get that soon.

ROSAVASANTH said...

பாலா, நான் எழுதிய டிஸ்கி எனக்கு, என்னையும் சீரியசாக படிப்பவர்களுக்கும் ஆனது. இந்த குறிப்பிட்ட பதிவில் திமுக எதிர்ப்பு அரசியல் என்ற வகையில், உங்களுக்கும், பதிவை எழுதிய அனானிக்கும் சில அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். அந்த நோக்கத்துடன் எனக்கு எந்த பகிர்தலும் இல்லை என்றே சொன்னேன். மற்றபடி வேறு பல விஷயங்களில் பகிர ஏதாவது இருக்கலாம். நீங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு என் ஆதரவு உண்டு என்பது உங்களுக்கு தெரியும். அதை சொல்வதிலும் எனக்கு தயக்கமில்லை.

சுகுணாவின் பதிவில் எழுதியதை இங்கே போட்டு, என்ன முரண்பாட்டை அனானி சுட்டி காட்டுகிறார் என்று கேட்டு தலை சொறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும், தெளிவிற்காக சில விஷயங்கள். சுகுணா திவாகரின் பதிவை படித்த போது யாரும் ஞாநியை இந்த அளவு திட்டித் தீர்த்திருக்கவில்லை. (அல்லது நான் அதை படித்திருக்கவில்லை). சுகுணாவும் ஞாநியின் கலைஞர் மீதான போலியான அக்கறையை விமர்சித்திருந்தாரே அன்றி (அவருடைய விமர்சனத்தில் எனக்கு பிரச்சனையும் இல்லை) பாப்பான் என்று திட்டவில்லை. சோவையும் ஞாநியையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது என்றுதான் எழுதியிருந்தார். நான் ஞாநியை பற்றி சொன்னதும் பல காலமாக என் பதிவில் ஞாநி பற்றி எழுத நேரும் போதெல்லாம் சொன்ன ஒரு கருத்து தான். ஞாநியிடம் இருக்கும் ஒரு முரட்டுத்தனமாக மூர்க்க குணம் கொண்ட பார்வை, வீம்பாக அவரை பல நிலைபாடுகளை வேண்டுமென்றே எடுக்க வைக்கும் என்பதே. இன்றய அவரது கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பையும் அவ்வாறே பார்கிறேன். இது ஒரு புதை குழி, இதில் விழுந்து ஞாநி இன்னும் பாதாளத்தில் போக நேரிடும் என்பது என் கணிப்பு. மற்றபடி கருணாநிதி பற்றிய ஓ பக்கத்தில் பார்பனியம் வெளிபட்டதாக எதுவும் நான் சொல்லவில்லை. (கண்ணகி விஷயத்திலும் அவரிடம் பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை என்பதையும், தேவர் ஜாதி வெறியர்களால் (குறிப்பிட்ட அளவிற்கேனும் தன் சொந்த ஜாதி பற்றி விமர்சனம் செய்துள்ள) ஞாநி `பாப்பான்' என்று தாக்கப் பட்ட அநியாயத்தையும் குறிப்பிட்டுள்ளேன்). இப்போதய தெளிவிற்கு இது போதும் என்று நம்புகிறேன்.

இது போன்ற விவத்தங்களில் ஈடுபடும் ஆர்வம் இல்லாமலேயே பதிவுகள் நான் எழுதுவதில்லை. (பார்பனிய எதிர்ப்பு அரசியல் பேசும்) யாருமே ஞாநி மீதான ஜனநாயக தன்மை சற்றும் இல்லாத தாக்குதலை கண்டிக்காத காரணத்தால் இதை சொல்ல வேண்டியது முக்கியம் என்பதால் எழுத வேண்டியிருந்தது. அதற்கு இங்கே இடமளித்ததற்கு நன்றி.

said...

/////பேரு போட்டு எழுத விருப்பமில்லாதனாலதான் அனானியா சிலபேரு பின்னூட்டம் போடறாங்க. நீங்களே உங்க பேருல பதிவு போடாமத்தான் கி.அ.அ. அனானின்னு ஓசில பாலா பதிவுல அனானி பதிவுகளே போடறீங்க! இதுல நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா நீ யாருன்னு எனக்குதெரியும்னு என்னத்துக்கு தேவையில்லாத வீராப்பு நக்கல்? அடையாளம் தெரியக்கூடாதுன்னு விருப்பப்படற ஒரு சக அனானி பின்னூட்டக்காரரைப் பார்த்து இப்படி நக்கல் அடிக்கறேன்னு நினைச்சுக்கிட்டு கேள்வி கேக்கறது ஒரு கி.அ.அ.அனானிக்கு அழகா?! :)////

இளவஞ்சி

இதுக்கு முதல்ல பதில் சொல்லி விடுகிறேன்.

1.வந்த பின்னூட்டம் தொண்டன் என்ற பேரில் வந்தது..தொண்டன் அனானியா?

2.பதிவுக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாதது

3.எ அ பாலாவும் நானும் ஒண்ணு அப்படீன்னு புளித்துப் போன வாதத்தையே திரும்பத் திரும்ப வைத்தால் நான் என்னதான் சொல்வது? என்னை உனக்கு தெரியாது..திரும்ப திரும்ப இதையே சொல்லும் உன்னை எனக்கு தெரியும்...தெரியும் என்றுதான் சொல்ல வேண்டும் :)

அது சரி இளவஞ்சி, நான் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் கண்களில் படவில்லையா... இல்லை இல்லை ...பட்டிருக்கும் அதுதான் ஸ்மைலி போட்டிருக்கிறீர்களே :)

மற்ற கேள்விக்கு பதில் அடுத்த பின்னூட்டத்தில்

கி அ அ அனானி

said...

We The People said...

////என்னப்பா இது ஊருக்கெல்லாம் கொண்டை தெரியுதுன்னு நக்கலுட பார்ட்டி தன் கொண்டையை மறைக்காம வந்து பின்னூட்டமிட்டிருக்கு :))))////

இதை சொன்னதுக்குத்தான் இளவஞ்சி கோவித்துக் கொள்கிறார் :)

///அப்புறம் பாலா, தி.மு.க கூட்டத்துக்கு போயிட்டு வந்து எதிர் கட்சியை திட்டுறாங்கன்னு சொல்லறதுல அர்த்தமில்லை :)))///

பாவம் எ அ பாலா , அவர் பதிவில்லை இது :) ஜெய், திட்டுரது தப்பில்லை,என்ன சொல்லித் திட்டுனாங்க அப்படீங்கரதுதான்.. மேலும் என் கண்டனத்தை பதிவு செய்யவே இந்தப் பதிவு என குறிப்பிட்டு இருக்கிறேனே?

கி அ அ அனானி

ஜோ/Joe said...

//ஞாநி எழுதியதை இன்னும் படிக்கவில்லை என்றாலும்//

இங்கே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இடும் ரோசா அவர்கள் முதலில் ஞானி எழுதியதை ஆனந்த விகடனில் அதுவும் அந்த படங்களோடு படித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

//இன்றய அவரது கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பையும் அவ்வாறே பார்கிறேன். இது ஒரு புதை குழி, இதில் விழுந்து ஞாநி இன்னும் பாதாளத்தில் போக நேரிடும் என்பது என் கணிப்பு.//

இதை நான் ஞாநிக்கு திருந்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கிறேன்.

ஐயா, மற்ற ஜாதியினரிடம் தாங்கள் முற்போக்காளர்கள் என்று நினைக்க வேண்டும் என்பதற்காகவே பல பார்ப்பன பதிவர்கள் தங்கள் ஜாதியையே மற்றவர் திட்டுவதை விட அதிக அளவில் திட்டுகின்றனர். அந்தோ பாவம் சந்தர்ப்பம் வரும்போது அவர்களே பார்ப்பனர் என்ற ஹோதாவில் திட்டுகள் வாங்குகின்றனர்.

இந்த கஷ்டம் மற்ற ஜாதியினருக்கு இல்லை. ஏனெனில் எப்போதுமே அவர்கள் தத்தம் ஜாதியை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். கலப்புத் திருமணம் மற்றவருக்கு உபதேசம் செய்வார்கள், ஆனால் தங்கள் விஷயங்களில் மட்டும் திடீரென சத்புத்திரனாகவும் சுயஜாதி அபிமானியாகவும் மாறி தத்தம் ஜாதியிலேயே பெண் எடுப்பார்கள்.

ஆகவேதான் நான் சகபார்ப்பனருக்கு கூறுவேன். ஐயா, நீங்கள் நீங்களாகவாகவே இருங்கள். மற்ற ஜாட்டான்களின் மதிப்புக்காக போலியாகவெல்லாம் நடக்காதீர்கள். அதனால் என்ன பயன் விளையும்? உங்கள் சந்தர்ப்பம் வரும்போது நீங்களே அசிங்கப்படுவதுதான் நடக்கும்.

இது ஞாநிக்கும் பொருந்தும், ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் ரோசா வசந்துக்கும் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இங்கே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இடும் ரோசா அவர்கள் முதலில் ஞானி எழுதியதை ஆனந்த விகடனில் அதுவும் அந்த படங்களோடு படித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்.//
இவ்வாறு எழுதும் ஜோ அவர்கள் எனது ஞாநி பற்றிய பதிவைப் பார்த்து கருணாநிதி அக்காலத்தில் 1984 -ல் பேசிய வக்கிரப் பேச்சை படித்து கருத்து சொன்னால் தன்யனாவேன்.

பார்க்க: http://dondu.blogspot.com/2007/10/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

டோ ண்டு சார்,
//
இது ஞாநிக்கும் பொருந்தும், ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் ரோசா வசந்துக்கும் பொருந்தும்.
//
இங்கு ஒருவர் கருத்து கூறினால், பெரும்பாலும் பின்புல ஆராய்ச்சி நடக்கிறது என்பதும், நோக்கம் கற்பிக்கப்படுகிறது என்பதும் கண்கூடு என்றாலும், ஞாநி, ரவி, வசந்த் ஆகிய மூவருமே போலியாக நடக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. அவர்கள் திடமாக நம்புவது குறித்தே (எதிர்த்தோ ஆதரித்தோ) எழுதி வருகிறார்கள் என்பது என் கருத்து.

எ.அ.பாலா

ROSAVASANTH said...

ஜோ, முதல் பின்னூட்டம் எழுதிய போது ஞாநி எழுதியதை படிக்கவில்லை. இரண்டாவது எழுதும் முன், பத்ரியின் பதிவு மூலம் (பாஸ்டன் பாலா சேமித்து வைத்திருந்த) ஞாநியின் கட்டுரையை படித்துவிட்டு, கண்டன கூட்ட உரைகளில் மார்க்ஸ், மனுஷ்யபுத்திரன் பேசியது போன்றவற்றை கேட்டுவிட்டே எழுதினேன். என் கருத்து மாறும் வகையில் எதுவும் நிகழவில்லை. (மார்க்ஸ் பேசியதில் மொத்தமாய் ஒரு கருத்து உருப்படியானது. அது ஞாநியின் விகடன் கட்டுரையில், பாரதியையும் அத்வானியையும் ஒப்பிட்டவர் பெரியாரையும் கலைஞரையும் ஒப்பிடவில்லை என்பது. மற்றபடி எல்லாம் வெத்து polemics. அதை தவிர வேறு எதையும் மார்க்ஸ் இனி செய்யப் போகிறார் என்று எனக்கு தோன்றவில்லை. (தமிழ் இணையத்தைல் அவரை எல்லாம் தாண்டி இதை பலர் செய்துவருகிறார்கள். இதற்கு பேராசிரியர் மார்க்ஸ் தேவையில்லை). 15 வருடமாய் மார்க்ஸ் பின்நவீனத்துவம் பேசி வருகிறார். இவர் எழுதுவதெல்லாம், முழுக்க முழுக்க சாராம்சபடுத்துதல். சாராம்சபடுத்துதலை முழுவதும் நிராகரிக்கும் பின்நவீனத்துவத்திற்கும், இவர் எழுதுவதற்கும் என்ன எழவு சம்பந்தமோ?) அது சரி, பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறேனா?! இருக்கட்டும் நல்லது.

டோண்டு, உங்களின் ஒண்ணரையணா கருத்துக்கள், கேள்விகள், அறிவுரைகளுக்கு பதில் சொல்ல எனக்கு ஆர்வம் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகள் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் எழுதியதை பற்றியும் வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் நான் என்ன செய்யவேண்டும் என்று பரிந்துரைப்பதை, காட்டமாக எதையாவது சொலவதற்கு முன்பு, நிறுத்தி கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது ரோசா வசந்த் அவர்களே. பார்ப்பனர்களே தத்தம் ஜாதியை எதிர்ப்பதைப் பார்க்கும்போது மனம் பொறுக்கவில்லை. அதுவும் தேவையின்றி இஸ்ரேல் சம்பந்தமாக நான் எழுதியபோது பார்ப்பனராக இருப்பதால்தான் நான் இஸ்ரேலை ஆதரிக்கிறேன் என்றெல்லாம் குறிப்பிட்டீர்கள். அதெல்லாம் மனதில் நிற்கின்றன.

சொன்ன கருத்தைப் பார்க்காது சொன்னவன் ஜாதியை கூறி பழிப்பது (அதிலும் அவன் பார்ப்பனனாக இருந்தால் கேட்கவே வேண்டாம்) மட்டும் சரியான அணுகுமுறையா?

அப்படியெல்லாம் எதிர்த்த பார்ப்பனர்களே அதே மாதிரி சாதிப்பெயரால் திட்டப்படுவதை பார்க்கும்போது இதெல்லாம் இவர்களுக்கு தேவைதானா என எனக்குள் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

இளவஞ்சி

///"நீயும் அவந்தானா?!"ன்னு உங்க முத்திரைய தூக்கிட்டு குத்தவராம ///

என்கிட்ட முத்திரை எல்லாம் எதுவும் இல்லை...நீங்களா குத்திக்கிட்டா நான் பொறுப்பல்ல.

///கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி காஞ்சி மகா பெரியவருக்கு 100 வருவம் வாழ்ந்து முடிச்சதுக்கு விழா கொண்டாடுனாங்க இல்லையா? ///

இதை நான் மறுக்கவோ அல்லது தூக்கிப்பிடிக்கவோ வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? காஞ்சி பெரியவருக்கு கனகாபிசேகம் என்ற பெயரில் நடந்த துன்புறுத்தல் தவறுதான்.ஆனால் இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்மந்தம்?

நான் கேட்ட கேள்வி. சட்ட சபையில் போய் உங்களுக்காக உழைப்பேன் என்று பொதுமக்களிடம் போய் ஓட்டு சேகரம் பண்ணிய ஒரு நபர்(பப்ளிக் சர்வன்ட்) (காஞ்சி அப்படி எதுவும் பண்ணுச்சா)ஓட்டு போட்டவங்களுக்கு சுண்ணாம்பு தடவிட்டு, உடல்நிலை சரியில்லை அதுனால போக மாட்டேன் அப்படீன்னு பொய் அழுவாச்சி பண்ணுனது சரி கிடையாது இல்லையா அப்ப கண்டனம் பண்ணலை ஆனா எவனோ ஒருத்தன் உனக்குதான் உடம்பு சரியில்லையே அதுனால ஒதுங்கிகோயேன் அப்படீன்னு சொன்னா கண்டனம் பண்றீங்களே இது ஜால்ரா தட்டத்தான்..அந்த மாதிரி ஜால்ரா தட்டுரதுக்கு என் கண்டனம் அப்படீன்னு சொல்லியிருக்கேன்.

புரியுதுங்களா...நான் கேட்டதே வேற..ஞாநி சொன்னது சரியா,தப்பா இதெல்லாம் நான் போகவே இல்லை.

அப்புறம் காஞ்சி மடத்தை அல்லது அதன் கொள்கைகளை கண்ணை மூடிக்கொண்டு நான் தூக்கிப் பிடிப்பேன் என நப்பாசையுடன் எதிபார்த்தால் " Sorry , You have come to a wrong address"

கி அ அ அனானி

பினாத்தல் சுரேஷ் said...

ஞாநி விவகாரத்தில் கண்டனக்கூட்டம் போன்றவையெல்லாம் கூட்டம் நடத்துபவர்களின் விளம்பர ஆர்வத்தைத் தவிர வேறெதையும் காட்டவும் இல்லை, சாதிக்கப்போவதும் இல்லை.

ஞாநிக்கு காழ்ப்புணர்வு, வேண்டுமென்றே கூறினார் என்றே வைத்துக்கொண்டாலும், கலைஞரை அவரைவிட நேரடியாகவே எதிர்க்கும் பலரைவிட ஞாநிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்பதும் எனக்குப் புரியவில்லை. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற பரிந்துரை பூணூல் நெளியும் சட்டைகளால் மட்டுமே கொடுக்கப்படக் கூடிய ஒன்றா என்ன? கேனத்தனம்.

ஆனால், டோண்டு இங்கே எழுதுவது, ரோசாவசந்த் பாணியில் சொல்லப்போனால் அருவருப்பைத்தான் ஏற்படுத்துகிறது.

//ஏனெனில் எப்போதுமே அவர்கள் தத்தம் ஜாதியை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்//
இதற்கு சதவிகித ரீதியாக எதேனும் ஆதாரம் இருக்கிறதா அல்லது நங்கநல்லூர் எம் ஜி ஆர் தெரு ஸ்ட்டெடிஸ்டிக்ஸ் மட்டும்தானா?
// மற்ற ஜாட்டான்களின் மதிப்புக்காக போலியாகவெல்லாம் நடக்காதீர்கள். //
அவர்கள் போலியாக நடக்கிறார்கள் என்ற அனுமானத்துக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் டோண்டு? மூடிய கருத்தாக்கத்துக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும்.

//அப்படியெல்லாம் எதிர்த்த பார்ப்பனர்களே அதே மாதிரி சாதிப்பெயரால் திட்டப்படுவதை பார்க்கும்போது இதெல்லாம் இவர்களுக்கு தேவைதானா என எனக்குள் தோன்றுகிறது.//

என்ன செய்ய வேண்டும்? பிராமண சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கி இதுவரை செய்ததெல்லாம் தவறு என்று இம்போஸிஷன் எழுத வேண்டுமா?


இதைத் தவிரவும் யார் இந்த மேட்டரைப் பேசினாலும் 1880ல் பெரியார் இப்படி பேசினாரே, 1950ல் கருணாநிதி பேசினாரே - அதற்கு உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்ற ரிட்டொரிக்!

said...

//100 வயது முதியவரு அந்த வயசுலயும் இந்து மதத்துக்கு சேவை செய்யறதை ஆடம்பர விழாவா எடுத்து கொண்டாடுனா பக்தனாக எங்க மனசு ஏத்துக்கும் அதைப்பத்தி கேள்வி கேட்டா அந்தக்கேள்வி நரகல்னு சொல்லற அளவுக்கு கோவம் வரும்கற உணர்வுக்கும், எங்க கட்சித் தலைவரு உயிருள்ள வரைக்கும் அவர்தான் தலைவர் அதைப்பத்தி கேள்வி கேட்டா தொண்டனாக எங்களுக்கு கோவம் வரும்கற உணர்வுக்கும் என்னய்யா வித்தியாசம்? //

எந்த வித்தியாசமும் கிடையாது. சங்கர மடத்தின் அடிப்பொடிக்கு இருக்கும் அதே மனப்பான்மைதான் அ.மார்க்ஸ்,அறிவுமதி,பிரபஞ்சன் மாதிரி நபர்களுக்கும் இருக்கிறது.என்ன எளவு...சங்கர மட பக்தன் தன்னை அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்வதில்லை, இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

dondu(#11168674346665545885) said...

//இதற்கு சதவிகித ரீதியாக எதேனும் ஆதாரம் இருக்கிறதா அல்லது நங்கநல்லூர் எம் ஜி ஆர் தெரு ஸ்ட்டெடிஸ்டிக்ஸ் மட்டும்தானா?//
வெளியில் எல்லாம் ஏன் போக வேண்டும்? தமிழ் இணையத்தையே பார்த்து கொள்ளலாம்.

//என்ன செய்ய வேண்டும்? பிராமண சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கி இதுவரை செய்ததெல்லாம் தவறு என்று இம்போஸிஷன் எழுத வேண்டுமா?//
புத்தி வந்து உணர்ந்து அடக்கி வாசித்தால் போதும். என்ன செய்தாலும் இணையத் தாசில்தார்களாக ஆணவத்துடன் செயல்படுபவர்களிடம் அவர்கள் நால் பெயர் வாங்க முடியாதுதான். அது தேவையுமில்லை என்பதுதான் நான் இப்போது அழுத்தம் திருத்தமாகக் கூறுவது.

//இதைத் தவிரவும் யார் இந்த மேட்டரைப் பேசினாலும் 1880ல் பெரியார் இப்படி பேசினாரே, 1950ல் கருணாநிதி பேசினாரே - அதற்கு உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்ற ரிட்டொரிக்!//
இக்கேள்வி கலைஞரின் ஜால்ராக்கள் பதில் சொல்ல வேண்டிய விஷயம். அப்படித்தான் எல்லா இடங்களிலும் கேட்பேன். எங்குமே எவருமே சரியான பதிலைக் கூற இயலவில்லையே. அதுக்கு என்ன இப்போது?

டோண்டு ராகவன்

ilavanji said...

அய்யா கி.அ.அ அனானி,

உங்களுக்கு பதிவு போட இடம் கொடுத்த பாலா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க. நின்னு விளையாடுங்க! Stand and Play. எனக்கு தெரிஞ்சு இதுக்கு அர்த்தம் மத்தவங்க செயலிலும் சொல்லிலும் இருக்கற சீண்டுகிற தன்மைக்கு பலியாகாமல் சொல்லவந்த வந்த கருத்தை மட்டும் வண்ணமாக அழுத்தமாகச் சொல்லி விவாதத்தை நடத்தறது. இல்லைன்னா ஆஸ்த்ரேலியாக்காரன் ஸ்லெட்ஜிங் செஞ்சு நம்மாளுங்களை உசுப்பேத்திவிட்டு அவுட்டாக்கற மாதிரிதான் ஆகிரும். ஒரு கருத்தை பதிவா போட்டு விவாதத்துக்கு வைக்கறீங்கன்னா அதை படிக்கற நூறுபேரும் ஒரே மனநிலையிலா படிக்கப் போறாங்க? ஒத்துக்கறவதும் எதிர்கறவனும் விதவிதமா ரியாக்ட் செஞ்சு ஆளையேக்கவுத்து தன்பக்கம் இழுக்கறமாதிரியோ இல்லைனா சும்மா வெறுப்பேத்தறதுக்குன்னு வார்த்தைகளால் சீண்டறதோ நடக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் மடங்காம அதுக்கேத்தாமாதிரி அவங்கபோலவே ரியாக்ட் செய்யாம சொல்லற கருத்துல மட்டும் கவனமா இருந்தீங்கன்னா விவாதம் நல்லவிதமா போகும். இல்லைன்னா 10வது பின்னுட்டத்துக்க்கு மேல பேஜாருதான். 90% வலைப்பதிவு விவாதங்க ஊத்தி மூடறது இதுனாலதான். இந்தமாதிரி இல்லாம் நல்லவிதமா விவாதம் நடந்த பல பதிவுகளும் இங்க இருக்கு. உங்களுக்கு சொன்னதும் ஸ்டெடியா நின்னு ஆடுங்கங்கறதுதான்! :) என்னைக்கேட்டா இதை படிக்கறவங்களைவிட பதிவு போட்டவனுக்குதான் அவசியம் வேனும்னு நினைக்கறவன். அதனாலதான் அதை அனானிக்கு சொல்லாம உங்களுக்கு சொன்னேன்.

ஒரு முறை சிரமம் பார்க்காம மீண்டும் ஒரு முறை என் பின்னூட்டத்தை படிச்சிங்கன்னா சவுகரியம்! நான் யாரு பெரியவங்க, யாரு நல்லவங்கன்னா சொல்லியிருக்கறேன்? இல்லை மகாபெரியவருதான் மோசம் கலைஞர் பிஸ்துன்னனா? என் கேள்வில இருக்கறது இவங்களோட தலைமையின் சார்புத்தன்மைல இருக்கறவங்க தம் தலைவருமேல விமர்சனம் வந்தா எப்படி எதிர்வினை செய்யாறாங்க அப்படிங்கறதுதான். பெரியவரு மேட்டரும் விகடன் வந்ததால இங்க சொல்லறது சரியா இருக்கும்னு நினைச்சேன். எப்படி மகாபெரியவருக்கு நடந்த விழாவைப்பத்தி ஒரு கேள்வி வைச்சா அந்த அமைப்பை சார்ந்தவங்களுக்கு தாங்கிக்க முடியலையோ அதே மாதிரி ஒரு எதிர்வினைதான் இவர்களின் இந்த கண்டனக்கூட்டம்னு எனக்கு படுது. இதுல ஏதோ இவங்கதான் நாகரீகம் தெரியாத வகையில் கேலவலமா கண்டனக்கூட்டம் நடத்தறாங்க அப்படின்னு பேசறது ஆச்சரியமா இருக்கு! எல்லா கும்பலுக்கும் உள்ள இயல்பான ஒரு குணாதிசியம் இது. அதான் சொல்ல வந்தது. இந்த கேள்வி பதிவுக்கே சம்பந்தமில்லைன்னா நான் என்ன சொல்லறது?

நெஜமாவே சீரியசா கேக்கறேன்! கலைஞர் ஏன் சட்டசபைக்கு போகலைன்னு உமக்கு தெரியாதா?! :)

மத்தபடி நீங்க காஞ்சிய தூக்கிப்பிடிக்கற ஆளா இல்லையாங்கறதெல்லாம் எனக்கு தெரியாது. இந்த பின்னூட்டங்களும் உங்கமேல இருக்கற நம்பிக்கைல போடலை. எல்லாம் பாலா மேல இருக்கற நம்பிக்கைதான்! :)

said...

/என்ன செய்வது ரோசா வசந்த் அவர்களே. பார்ப்பனர்களே தத்தம் ஜாதியை எதிர்ப்பதைப் பார்க்கும்போது மனம் பொறுக்கவில்லை. அதுவும் தேவையின்றி இஸ்ரேல் சம்பந்தமாக நான் எழுதியபோது பார்ப்பனராக இருப்பதால்தான் நான் இஸ்ரேலை ஆதரிக்கிறேன் என்றெல்லாம்குறிப்பிட்டீர்கள். அதெல்லாம் மனதில் நிற்கின்றன. /

டோண்டு சார்,

திராவிட குஞ்சுகளை விட உரத்த குரலில் மற்ற பார்ப்பனரை திட்டி தம்மை காத்துகொள்வது சில பார்ப்பனருக்கு தேவையாக இருக்கிறது.அது காலத்தின் கட்டாயம்.ஒரு பாப்பான் திமுகவை விமர்சிப்பதை கழக குஞ்சுகள் சகித்துக் கொள்ளவே கொள்ளாது.

******* Edited *******

இப்போது பாருங்கள்,........... பாப்பானை ஆதரித்ததற்கு ஜோவுக்கெல்லாம் முழ நீள தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வசந்த குமாரர் ஆளாயிருக்கிறார். ****** Edited ******

ஞானி,ரவி ஸ்ரீனிவாஸ்,ரோசா வசந்த்,மருதையன் மாதிரி பார்ப்பனர்கள் எப்படியும் ஒரு நாள் சோவுடன் இணைவைத்து தான்பேசப்படுவார்கள்.அவர்கள் என்ன ஆக்ரோஷத்துடன் பார்ப்பனர்களை எதிர்த்தாலும் பிரயோஜனமில்லை.

ஆனானப்பட்ட தயாநிதி மாறனையே பிரச்சனை என்று வந்ததும் கல்யாண சுந்தரம் அய்யரின் பேரன் என்பதால் பாப்பான் என்று சொல்லிவிட்டார்கள். ஞானி,வசந்த்,ரவி ஸ்ரீனிவாஸ் ,மருதையன் எல்லாம் எந்த மூலைக்கு?

(வீரன் விஜயவர்மன்) 8:51 PM

said...

36 ......

said...

இளவஞ்சி,
///உங்களுக்கு பதிவு போட இடம் கொடுத்த பாலா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க. நின்னு விளையாடுங்க! Stand and Play. எனக்கு தெரிஞ்சு இதுக்கு அர்த்தம் மத்தவங்க செயலிலும் சொல்லிலும் இருக்கற சீண்டுகிற தன்மைக்கு பலியாகாமல் சொல்லவந்த வந்த கருத்தை மட்டும் வண்ணமாக அழுத்தமாகச் சொல்லி விவாதத்தை நடத்தறது. இல்லைன்னா ஆஸ்த்ரேலியாக்காரன் ஸ்லெட்ஜிங் செஞ்சு நம்மாளுங்களை உசுப்பேத்திவிட்டு அவுட்டாக்கற மாதிரிதான் ஆகிரும். ஒரு கருத்தை பதிவா போட்டு விவாதத்துக்கு வைக்கறீங்கன்னா அதை படிக்கற நூறுபேரும் ஒரே மனநிலையிலா படிக்கப் போறாங்க? ஒத்துக்கறவதும் எதிர்கறவனும் விதவிதமா ரியாக்ட் செஞ்சு ஆளையேக்கவுத்து தன்பக்கம் இழுக்கறமாதிரியோ இல்லைனா சும்மா வெறுப்பேத்தறதுக்குன்னு வார்த்தைகளால் சீண்டறதோ நடக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் மடங்காம அதுக்கேத்தாமாதிரி அவங்கபோலவே ரியாக்ட் செய்யாம சொல்லற கருத்துல மட்டும் கவனமா இருந்தீங்கன்னா விவாதம் நல்லவிதமா போகும். இல்லைன்னா 10வது பின்னுட்டத்துக்க்கு மேல பேஜாருதான். 90% வலைப்பதிவு விவாதங்க ஊத்தி மூடறது இதுனாலதான். இந்தமாதிரி இல்லாம் நல்லவிதமா விவாதம் நடந்த பல பதிவுகளும் இங்க இருக்கு. உங்களுக்கு சொன்னதும் ஸ்டெடியா நின்னு ஆடுங்கங்கறதுதான்! :) என்னைக்கேட்டா இதை படிக்கறவங்களைவிட பதிவு போட்டவனுக்குதான் அவசியம் வேனும்னு நினைக்கறவன். அதனாலதான் அதை அனானிக்கு சொல்லாம உங்களுக்கு சொன்னேன்.///

முழுவதும் ஏற்கிறேன்...நன்றி.

உங்கள் முதல் பின்னூட்டம் இந்தக் கருத்தை எனக்கு உணர்த்தவில்லை... ஏதோ அனானியை நான் கிண்டலடித்து அதை நீங்கள் சரியில்லை என சொல்வது போன்ற பொருளை தந்ததால்தான் பதில் எழுதினேன்.

///ஒரு முறை சிரமம் பார்க்காம மீண்டும் ஒரு முறை என் பின்னூட்டத்தை படிச்சிங்கன்னா சவுகரியம்! நான் யாரு பெரியவங்க, யாரு நல்லவங்கன்னா சொல்லியிருக்கறேன்? இல்லை மகாபெரியவருதான் மோசம் கலைஞர் பிஸ்துன்னனா? என் கேள்வில இருக்கறது இவங்களோட தலைமையின் சார்புத்தன்மைல இருக்கறவங்க தம் தலைவருமேல விமர்சனம் வந்தா எப்படி எதிர்வினை செய்யாறாங்க அப்படிங்கறதுதான். பெரியவரு மேட்டரும் விகடன் வந்ததால இங்க சொல்லறது சரியா இருக்கும்னு நினைச்சேன். எப்படி மகாபெரியவருக்கு நடந்த விழாவைப்பத்தி ஒரு கேள்வி வைச்சா அந்த அமைப்பை சார்ந்தவங்களுக்கு தாங்கிக்க முடியலையோ அதே மாதிரி ஒரு எதிர்வினைதான் இவர்களின் இந்த கண்டனக்கூட்டம்னு எனக்கு படுது. இதுல ஏதோ இவங்கதான் நாகரீகம் தெரியாத வகையில் கேலவலமா கண்டனக்கூட்டம் நடத்தறாங்க அப்படின்னு பேசறது ஆச்சரியமா இருக்கு! எல்லா கும்பலுக்கும் உள்ள இயல்பான ஒரு குணாதிசியம் இது. அதான் சொல்ல வந்தது. இந்த கேள்வி பதிவுக்கே சம்பந்தமில்லைன்னா நான் என்ன சொல்லறது?///

நீங்கள் சொல்வது நன்றாக விளங்குகிறது.நீங்கள் கருணாநிதியை ஆதரித்தோ மடத்தை எதிர்த்தோ கருத்து சொன்னதாக நானும் நினைக்கவில்லை.பொருள் விளங்க கம்பாரிடிவ் உதாரணம் தந்தீர்கள் என்றே கொள்கிறேன்.
நானும் இவர்களது கண்டனக் கூட்டம் எனக்கு கேலிக் கூத்தாகப் பட்டதனால் அதனைப் எனது கண்டனத்துடன் பதிவு செய்தேன்.இரண்டு விஷயங்களுக்காக
1.ஏதோ இது முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் சேர்ந்து நடத்திய கூட்டம் என்று ஒரு தோற்றம் உருவாக்குவதை கண்டித்து.
2. இது மிகவும் நல்லவிதமாக , கண்ணியமாக நடந்த ஒரு கூட்டம் என்று வலையில் எழுதியவர்களில் சிலர் கட்சி சார்பற்றவர்கள்(எனக்கு தெரிந்த வரையில்) அவர்கள் ஏதோ இலக்கியகர்த்தாக்கள்/முற்போக்குவாதிகள்சேர்ந்து கண்ணியமாக நடத்தப்பட்ட ஒரு கூட்டம் போல எழுதியிருந்ததைப் படிக்க நேரிட்டதால்..இது வெறும் ஜால்ரா கூட்டம்தான் என என் கண்டனத்தைப் பதிவு செய்தேன்.

//நெஜமாவே சீரியசா கேக்கறேன்! கலைஞர் ஏன் சட்டசபைக்கு போகலைன்னு உமக்கு தெரியாதா?! :)///

இதுக்கு வசூல்ராஜா படத்தில் கிரேஸி மோஹன் சொல்வது போல் "How do I know sir?" என்று சொல்லி கூடவே ஒரு ஸ்மைலி போட்டுக்குறேன் :)

///இந்த பின்னூட்டங்களும் உங்கமேல இருக்கற நம்பிக்கைல போடலை. எல்லாம் பாலா மேல இருக்கற நம்பிக்கைதான்! :)///

சரியாகச் சொன்னீர்கள்.:)

கி அ அ அனானி.

ஜோ/Joe said...

//பாப்பானை ஆதரித்ததற்கு ஜோவுக்கெல்லாம் முழ நீள தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வசந்த குமாரர் ஆளாயிருக்கிறார்.//

ரோசாவசந்த் என்னை விட அறிவில் சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை .ஆனால் உம்மைப் போன்ற முகமூடி அணிந்து 'வீரன்' என்று போட்டுக்கொள்பவரை விட நேரடியாக அணுகும் என்னை அவர் மதிப்பார் என்பதிலும் சந்தேகமில்லை..மற்றபடி இங்கே நீர் குறிப்பிட்டுள்ள சாதிப்பெயர் உட்பட எந்த ஜாதிப்பெயரையும் குறிப்பிட்டு நான் இதுவரை எழுதியதில்லை.

ரோசாவசந்த் சார்,
ஞானியின் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமலேயே எனக்கு கோபம் வந்ததற்கு காரணம் எதுவென்று தருமியின் பதிவில் சொன்னதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்

*****
சொல்லபட்ட நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்களும் ,கலைஞரின் தலைக்கு விலை வைத்ததும் ,பல முனைகளில் இருந்து கலைஞருக்கு அம்புகள் எய்யப்படும்நேரத்தில் ,ஞானிக்கு வந்த ஞானோதயம் தேவையில்லாதது .ஞானிக்கு உண்மையிலேயே உள் நோக்கம் இல்லையென்றே வைத்துக்கொள்ளுவோம் .ஆனால் வடநாட்டு நாதாரிகளும் ,உள் நாட்டு கோள்மூட்டிகளும் கலைஞரை எள்ளி நகையாடும் போது ,கருணாநிதியை துரத்த வேண்டும் ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கொக்கரிக்கும் போது ,சமயம் பார்த்து அதே நேரத்தில் கலைஞர் மீது அக்கரை வருவதாக சொல்லுவது என்னால் நம்ப முடியவில்லை ..அதனால் விளைந்த பயன் என்ன ? டோண்டு-வுக்கு கலைஞரை திட்டி 2 பதிவு எழுத வாய்ப்பு கிடைத்தது அவ்வளவு தான்.

said...

தலையெல்லாம் சுத்துது, இங்க நடக்கிற விவாதத்தை படிக்கறதுக்குள்ள :)))))))))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails